சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,096 குறைவு

Mar 13, 2020 03:30 PM 864

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 96 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் 32 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி 18 முதல் ஒவ்வொரு நாளும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது.

கடந்த 6 ஆம் தேதி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை, அதன் பிறகு சற்று குறையத் தொடங்கியது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 96 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 32 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 137 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 20 க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 45 ரூபாய் 90 காசுகளுக்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Comment

Successfully posted