ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை

Apr 11, 2019 02:55 PM 398

கொளுத்தும் கோடை கால வெயிலில் குளிர்ச்சி அளித்து வரும் ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது ஐந்திணை மரபணு பூங்கா. இங்கு நிலங்களின் சிறப்பிற்கு ஏற்றார் போன்று ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டது. குறிஞ்சி பூங்கா ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல்லிலும், நெய்தல் பூங்காவும், மருதம் பூங்கா தஞ்சையிலும், பாலை பூங்கா ராமநாதபுரத்திலும் அமைந்துள்ளது.

இந்த பூங்கா கிழற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் திருச்செந்தூர், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளை ஐந்திணை பூங்கா வெகுவாக கவர்ந்து வருகிறது.

Comment

Successfully posted