புரட்சித் தலைவியின் நினைவிடத்தை மெய் மறந்து ரசித்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி!

Apr 09, 2021 09:56 PM 580

சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே, புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் 50 புள்ளி 8 கோடி செலவில், மிகப் பெரிய பீனிக்ஸ் பறவையின் உருவ அமைப்பில், இந்த நினைவிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி திறந்து வைத்தார். அதன் பின்னர், ஜெயலலிதா நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுத் திறன் பூங்கா ஆகியவை பராமரிப்பு பணி காரணமாக மூடப்பட்டன. இந்நிலையில், பரமாரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

Comment

Successfully posted