தேனி மக்களவை தொகுதியில் 3வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு

May 16, 2019 07:14 PM 76

தேனி நாடாளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளுக்கான விவிபேட் இயந்திரங்கள், கண்காணிப்பு இயந்திரங்கள், தாலுகா அலுவலகத்தில், அனைத்து கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம், வடுகபட்டி ஆகியவாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவையில் இருந்து கடந்த 7ம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், வாக்குப் பதிவுக்காக, 30 விவிபேட் இயந்திரங்கள், 20 கண்காணிப்பு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டது. வீண் வதந்திகளை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் விவிபேட் இயந்திரங்களும், வாக்கு கண்காணிப்பு இயந்திரங்களும் சோதனை செய்யப்பட்டது. வாக்காளர்களின் பெயர், சின்னங்கள் அனைத்து கட்சியினரின் முன்னிலையில் பொருத்தப்படவுள்ளது.

Comment

Successfully posted