திண்டுக்கலில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கோரிக்கை

Jun 13, 2019 11:02 AM 141

திண்டுக்கல்லில் செண்டு மல்லி பூ விளைச்சல் அமோகமாக இருப்பதால், நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தர வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலகிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் செண்டு மல்லி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செண்டு மல்லி பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 300 லிருந்து 600 கிலோ வரை செண்டு மல்லி பூ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted