கொரோனா பரவுவதில் குழந்தைகளுக்கு முக்கிய பங்கு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Aug 30, 2020 01:13 PM 959

கொரோனாவுக்கு குழந்தைகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள், அவர்களது உடலில் வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறது என்பது போன்ற ஆய்வுகள், தென்கொரியாவின் 22 மருத்துவமனைகளில், தொற்று பாதித்த 91 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்டன. சியோல் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் தி ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட பல நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கொரோனா தொற்றுக்கு ஆளான குழந்தைகள், பல வாரங்களுக்கு அறிகுறிகளுடன் இருக்க முடியும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதேநேரம், அறிகுறியற்ற குழந்தைகள், நீண்ட நாட்களுக்கு வைரசின் கூடாரமாக இருந்துள்ளனர். இதனால், அவர்கள் நோய் பரப்பும் முக்கிய காரணிகளாக இருப்பதாகவும், அறிகுறி இல்லாமலோ, அறிகுறிகள் அனைத்தும் குணமடைந்த பின்னரோ, குழந்தைகளிடம் எதிர்பார்க்காத வகையில் நீண்ட காலத்துக்கு வைரஸ் மரபணுக்கள் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்

Comment

Successfully posted