உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன

Jun 05, 2019 03:41 PM 254


உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.

 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஊகம்பட்டியில் இயற்கை விவசாயி ரவி என்பவருக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தில், சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதில், மாமரம், சப்போட்டா, கொய்யா, கொடுக்காபுளி, நாவல் போன்ற பழவகை மரங்கள் நடப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தின நாளில் துவக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஏராளமான விவாசயிகள், கல்லூரி மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

Comment

Successfully posted