மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Nov 28, 2018 08:40 AM 383

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதால், மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல் கரையைக் கடந்தபோது, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்ததந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடுமையான சேதத்தை சந்தித்த திருவாரூர் மாவட்டத்திலும், மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், மன்னார்குடி கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

 

Comment

Successfully posted