திருவள்ளூரில் ஒரு டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Oct 20, 2019 03:13 PM 73

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, சுமார் ஒரு டன் எடை கொண்ட 12 செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். 

காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தாறுமாறாக ஓட்டிய வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும் வாகனத்திலிருந்த மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து, வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் ஒரு டன் எடைகொண்ட செம்மரகட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 10 லட்ச ரூபாய் என கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted