எலியால் சிரிப்பூட்டிய எளிய மனிதர் - வால்ட் டிஸ்னி பிறந்தநாள்

Dec 05, 2020 07:53 PM 2357

கற்பனை உலகின் கதாநாயனாகவும், குழந்தைகளின் குதூகலத்திற்கு சொந்தக்காரராகவும் விளங்கும் வால்ட் டிஸ்னியின் 119வது பிறந்த தினம் இன்று. 

1901 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் சிகாகோவில் Elias - Flora தம்பதிக்கு நான்காவது மகனாக பிறந்த டிஸ்னி, சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், பறவைகள் மற்றும் விலங்குகளின் மீதும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தொலைதூரக் கல்வியில் கார்ட்டூன் பயின்ற அவர், குடும்பச்சூழலால் செய்தித்தாள் விநியோகித்தல், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என பல வேலைகள் செய்துள்ளார். சகோதரர் ராயுடன் இணைந்து Laugh-O-Gram எனும் நிறுவனத்தைத் துவங்கிய டிஸ்னி, கார்ட்டூனிஸ்ட் UB Iwerks-யும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

Animated விளம்பரங்கள் கைகொடுக்காததால் அனிமேஷன் கதாபாத்திரத்தோடு உண்மை கதாபாத்திரத்தை இணைத்து Alice in the cartoon land கதையை மையமாக வைத்து 7 நிமிட கேலி சித்திரத்தை உருவாக்கினார். அதுவும் தோல்வியடைந்தது. மனம் தளராத டிஸ்னி, Oswald the lucky rabbit என்ற கார்ட்டூனை உருவாக்கி அதிலும் ஏமாற்றப்பட்டார்.

அனிமேஷன் துறையில் சந்தித்த பல தோல்விகளுக்குப் பிறகுதான் மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை உருவாக்கினார். சார்லி சாப்லினின் தீவிர ரசிகரான டிஸ்னி, அவரின் தோற்றத்தை அடிப்படையாக வைத்து, மோஷன் பிக்சர்ஸில் ஒலியை இணைத்து Mortimer Mouse என்ற எலி கதாபாத்திரத்தை உருவாக்கியபோது, அந்த பெயர் டிஸ்னியின் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அதனால் மனைவி சொன்ன மிக்கி மவுஸ் என்ற பெயரையே வைத்தார். அதுவே அவருக்கு முதல் ஆஸ்கரைப் பெற்றுத்தந்தது. பிறகு அவர் உருவாக்கிய டொனால்டு டக் என்ற வாத்து கதாபாத்திரமும் மிக்கி மவுஸும் சேர்ந்து உலகையே சிரிக்க வைத்தன.

வால்ட் டிஸ்னியின் தொடர் முயற்சியின் மூலம், சிண்ட்ரல்லா, Peterpan, டாய் ஸ்டோரி, Frozen, Star wars என பல திரைப்படங்களும் கதாபாத்திரங்களும் உலக ரசிகர்களின் அங்கமாகிவிட்டன. அதனால் 2 கோல்டன் குளோப், 22 ஆஸ்கர் விருதுகளுடன் அதிக ஆஸ்கர் பெற்ற தயாரிப்பாளராக டிஸ்னி திகழ்கிறார்.

தான் உருவாக்கிய கற்பனை உலகத்தை நிஜத்திலும் குழந்தைகள் ரசிக்க வேண்டுமென எண்ணிய டிஸ்னி, 1955 ஆம் ஆண்டு ஜூலை 17ல் கலிஃபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் பூங்காவை திறந்தார்ர். அது உலகின் மகிழ்ச்சியான இடமாகக் கொண்டாடப்படுகிறது. எளிய குடும்பத்தில் பிறந்து எலியைக் கொண்டு உயர்ந்து Elite ஆக வாழ்ந்த வால்ட் டிஸ்னி, 1966 டிசம்பர் 15ஆம் நாள் புற்றுநோயால் உயிரிழந்தார். ஆனால் டிஸ்னியின் கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

Comment

Successfully posted