தனது உடல்நிலை சீராக இருப்பதாக பாடகர் எஸ்.பி.பி வீடியோ மூலம் தகவல்

Aug 05, 2020 08:25 PM 1195

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடகர் எஸ்.பி.பி தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். இதையடுத்து தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமக்கு சில அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted