என்.ஜி.கே திரைப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியீடு

Apr 12, 2019 06:51 PM 187

சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே திரைப்படத்தின் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள படம் நந்த கோபாலன் குமரன். சுருக்கமாக என்.ஜி.கே என்று சொல்லப்படும் இந்த திரைப்படம், அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை, மே மாதம் 31ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், இப்படத்திலிருந்து தண்டல்காரன் என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் கபிலன் எழுதியுள்ள இந்த பாடலை கே.ஜி.ரஞ்சித் பாடியுள்ளார்.

Comment

Successfully posted