கலாநிதியின் மகன் வேகமாக கார் ஒட்டி விபத்து- காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்

Apr 19, 2019 06:41 PM 100

வட சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் ஓட்டிய கார் மோதி காவல் உதவி ஆய்வாளர் படுகாயமடைந்தார்.

திமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி. இவர் நடந்து முடிந்த வட சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவரது மகன் சித்தார்த் தன்னுடைய காரில் எழும்பூர் பாந்தியன் சாலையில் வேகமாக சென்றுள்ளார். அப்போது, பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் மீது சித்தார்த்தின் கார் மோதியது. இதில், உதவி ஆய்வாளர் ஜெயபாலனுக்கு கால் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய காரினை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted