மதுரை அருகே தாயின் தலையில் கல்லால் தாக்கிக் கொல்ல முயன்ற மகன்

Sep 16, 2019 09:18 AM 87

மதுரை மாவட்டம் ஆத்திக்குளத்தில் இரவில் சீக்கிரம் உறங்கும் படி கூறிய தாயை மகனே கொல்ல முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் ஆத்திக்குளத்தைச் சேர்ந்த நமச்சிவாயம், பார்வதி தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான செந்தில் குமார் கடந்த 8 மாதமாக தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் செந்தில் குமார் இரவில் செல்பேசியில் வீடியோகேம் விளையாடியுள்ளார். இரவு வெகு நேரமாகியும் உறங்காமல் இருந்ததால் அவரின் தாய் பார்வதி சீக்கிரம் உறங்கும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தாய் பார்வதியைக் கல்லால் தாக்கிக் கொல்ல முயன்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் செந்தில்குமாரைக் காவல்துறையினர் கைது செய்தனர். காயமடைந்த பார்வதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Comment

Successfully posted