மாநில தலைநகரங்களில் மத்திய அரசின் தலைமை அலுவலகம் திறக்க முடிவு

Nov 14, 2018 12:07 PM 298

மாநில தலைநகர்களில், மத்திய அரசின் தலைமை அலுவலகம் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரங்களிலும் அங்கு செயல்படும் துறைகளின் தலைமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஆனால், மத்திய அரசுக்கு டெல்லியில் மட்டுமே தலைமை அலுவலகம் உள்ளது. எனவே, மத்திய அரசுக்கென மாநில தலைநகரங்களில் துறை சார்ந்த தலைமை அலுவலகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான இடம் குறித்து ஆராய்ந்து வரும் மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள அலுவலர்களிடம் இடத் தேர்வு, தேவையான இடம் உள்ளிட்டவை குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted