காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் ஹரிராம் பக்காருக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Mar 25, 2019 01:37 PM 196

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் ஹரிராம் பக்காரின் இறுதி ஊர்வலம், ராஜஸ்தானில் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர் ஹரிராம் உயிரிழந்தார்.

இதையடுத்து ராணுவத்தின் இறுதி மரியாதையுடன் ஹரிராமின் சொந்த ஊரான மக்ரானா நாகருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted