சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்...

Sep 17, 2021 08:23 PM 560

திருப்பூரில் 6 வயது சிறுவனை, தெருநாய்கள் கடித்துக் குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், தெற்குதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது ஆறு வயது மகன் பிரகதீஸ் நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சிறுவன் பிரகதீசை கடித்து குதறியவாறே தூக்கிச் சென்றது. நாய்களின் கடிதாங்காமல், சிறுவன் கதறிய கதறல் கேட்டு அருகில் இருந்த ஒருவர் தெருநாய்களை துரத்தியடித்து சிறுவனை மீட்டார். சிறுவனை தெருநாய்கள் கடித்துக் குதறிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தெருநாய்கள் கடித்ததில் காயமைடந்த சிறுவனுக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, வெள்ளியங்காடு, குப்பாண்டம்பாளையம், கோவில்வழி உள்ளிட்ட பகுதிகளில்
தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தெருவில் விளையாடும் சிறுவர்களை தெருநாய்கள் கடிப்பதோடு, வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தெருநாய்களின் தொல்லை குறித்து மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Comment

Successfully posted