ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரி சின்னத்திரை இயக்குநர்கள் போராட்டம்

Feb 10, 2019 12:28 PM 171

சின்னத்திரையில் பணிபுரியும் உதவி இயக்குநர்களுக்கு முறையான ஊதியத்தை தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். பணிக்கான ஊதியத்தை நிர்ணயம் செய்யக் கோரி சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் சார்பில் சின்னத்திரை துணை, உதவி இயக்குனர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த போராட்டத்தை இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களின் நிலையை தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்கவே இந்த போராட்டத்தை உதவி இயக்குநர்கள் நடத்துவதாக தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடன் தயாரிப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comment

Successfully posted