மியூசிக்கலி விபரீதம் - கேலி செய்ததால் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

Oct 18, 2018 01:10 AM 769

மியூசிக்கலி  ஆப் மூலம் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப்-ல் வித்தியாசமாக வேடம் அணிந்து சினிமா வசனங்களுக்கு நடித்துக் காட்டி அதை,  சமூகவலைதளங்களில் பதிவேற்றுவது தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் பெண் குரலில் பாடல்களைப் பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அவரின் இந்தப் பதிவை பலரும் விமர்சித்துள்ளனர். அதற்கு தன்னை பெண்ணாக நினைத்து கிண்டல், கேலி செய்தாலும், நான் தொடர்ந்து பெண் குரலில் பாடுவேன் என்று மற்றொறு வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கலையரசனின் பாடல் மற்றும் நடிப்பை பெண்களோடு ஒப்பிட்டு விமர்சனம் எழுந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்துகொண்டார்.

மியூசிக்கலி ஆப் மூலம் பெண்குரலில் பாடல் பாடிய ஒருவர் மீது சமூக வலைதளவாசிகள் வைத்த விமர்சனம் ஓர் உயிரை பறித்திருக்கும் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Comment

Successfully posted