சென்னையில் குடிநீர் தட்டுபாட்டை போக்க தமிழகஅரசு துரித நடவடிக்கை

Jun 14, 2019 10:40 AM 151

சென்னையில் குடிநீர் தட்டுபாட்டை போக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய தொழில்நுட்ப முறையில் குடிநீர் வழங்கி வரும் குடிநீர் வாரியம் பற்றிய செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கொள்ளாபுரம் பகுதியில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பத்துக்கும் மேற்ப்பட்ட குறுகிய தெருக்களை கொண்டுள்ள இந்த பகுதியில், பல வீடுகளில் தண்ணீர் அடிப்பம்பு இருந்தும், மேடான பகுதி மற்றும் போதிய அழுத்தம் இல்லாததால், அதில் குடிநீர் சென்று சேர்வதில்லை. அதனை களையும் விதத்தில், பொதுமக்கள் வீடுகளில் உள்ள அடிபம்புகளிலேயே குடிநீரை பிடித்துக்கொள்ளும் விதமாக, இன்ஜக்ட் (Inject) முறையில் குடிநீர் வழங்கி வருகிறது. மிக விரைவில், சென்னையில் இது போன்ற தொழில்நுட்பத்தில் குடிநீரை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கோடை மழை பொய்த்து போன நிலையில், பொதுமக்கள் அவதியடையாத வகையில் குடிநீரை வழங்க, அரசும், குடிநீர் வாரிய அதிகாரிகளும் பல்வேறு முயற்சிகளையும் தொழில் நுட்பங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted