கத்திரி வெயில் இன்றுடன் முடிந்தாலும் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் வெப்பம் 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்

May 29, 2021 04:36 PM 646

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்றுடன் முடிந்தாலும் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் வெப்பம் 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கடந்த மே 4ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுடைகிறது.

அக்னி நட்சத்திர காலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பப்பட்டது.

நேற்று அதிகபட்சமாக வேலூர், மதுரையில் தலா 105 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரியும், திருச்சியில் 103 டிகிரியும், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கடலூர், திருத்தணியில் 102 டிகிரி வெப்பமும் பதிவானது.

இந்நிலையில் தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்து வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை 2முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted