பள்ளிபருவ காதலால் நிகழ இருந்த விபரீதம், தடுத்த காவல்த்துறை

Apr 10, 2021 09:23 AM 2149

நெல்லை மாவட்டம் களக்காடு பக்கத்துல நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 நபர்கள் சந்தேகப்படுபடியான வகையில அந்த பகுதியில சுத்திவந்திருக்காங்க.. யார் அவங்க? எதுக்காக அந்த பகுதியில சுத்தி வந்தாங்க..

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பொத்தையடிப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதாக காளக்காடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பகுதியில் சந்தேகத்திற்கு, இடமளிக்கும் வகையில், நின்றுகொண்டிருந்த 4 பேரை சுற்றி வளைத்து கைது செய்து செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 4 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவர்கள் பணகுடி மற்றும் களக்காடு பகுதிகளைச் சேர்ந்த முத்துமனோ, சந்திரசேகர், கண்ணன், மாதவன் என்பது தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்டவர்களின் உறவுக்கார பெண் ஒருவர், பள்ளி பருவத்தில் ஒரு நபரை காதலித்ததும், சில காரணங்களால் காதலை கைவிட்ட அப்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்ட காதலன் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையறிந்து, ஆத்திரமடைந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். அவர்கள் தீட்டிகொடுத்த திட்டத்தின் அடிப்படையில் முன்னாள் காதலனை களக்காடு அருகே உள்ள பொத்தையடிக்கு வரவழைத்துள்ளார் இளம்பெண். அங்கு வந்த காதலனை மடக்கிபிடித்த பெண்ணின் உறவினர்கள், அவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். அதற்குள் இந்த சம்பவங்களை நோட்டமிட்ட காவல்துறையினர் ஆயுதங்களுடன் இருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Comment

Successfully posted