ஒடியன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியது - மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

Oct 12, 2018 10:11 AM 593

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் ஒடியன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒடியன். கடந்த இரண்டு வருட தயாரிப்பில் இருந்த இப்படம் தற்போது வெளியீடுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தை ஆஷிர்வாட் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆண்டனி பெரும்பவூர் தயாரித்துள்ளார். இருவர் படத்திற்கு பிறகுமோகன்லாலுடன் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு ஜெயசந்திரன் இசையமைத்துள்ளார்.

மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், இன்னசெண்ட், உட்பட பலர் நடைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted