காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கத்தை மாற்ற முடியாது - தமிழிசை சவுந்திரராஜன்

Oct 17, 2018 09:32 AM 348

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, வழிப்பாட்டு தலத்தில் உள்ள நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும் என்றார்.

பெண்கள் யாரும் போகக்கூடாது என்ற நியாயமான கோரிக்கையை அங்குள்ள அரசு செவிசாய்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதில்லை என பொதுவாக சொல்வது, இந்து மத எதிர்ப்பு உணர்வை பிரதிபலிப்பதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted