புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது -எஸ்.பி.வேலுமணி

Nov 28, 2018 08:08 AM 312

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் ஐவநல்லூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, பால், ரொட்டி அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இதனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான, அரிசி, பால் பவுடர் உள்ளிட்டவைகள் துரிதமாக வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 

Comment

Successfully posted