சத்தியமங்கலம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளி பரிதாபமாக பலி

Jun 13, 2019 02:57 PM 81

சத்தியமங்கலம் அருகே பக்கவாட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கூலி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி சாலையின் ஓரமாக தனது இருசக்கர வாகனத்தில் கூலி தொழிலாளி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவையிலிருந்து அட்டை பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, கனக்கரச்சம்பாளையம் பேருந்து நிறுத்ததின் அருகே சாலை வளைவில் அதிவேகமாக திரும்பியதில் கட்டுப்பாட்டை இழந்து அந்த இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்தது.

இதில் விபத்தில் சிக்கிய அந்த கூலி தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த கூலி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

Comment

Successfully posted