காத்திருப்பு வீணாகவில்லை...ரசிகர்களை ஏமாற்றாத #ENPT

Nov 29, 2019 11:47 AM 945

இயக்குநர் கவுதவ் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்துள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. தர்புகா சிவா இசையில் ஏற்கனவே பல படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 2017ம் ஆண்டு காதலர் தினத்துக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல பிரச்சனைகளில் சிக்கித்தவித்தது. இப்படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம் இன்று வெளியாகியது.

படம் வெளியாவதை முன்னிட்டு நேற்றைய தினம் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தை காண பெரும் ஆவலாக இருப்பதாகவும், ரசிகர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படம் வெளியான இடங்களில் காலை முதலே ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். பலர் படம் குறித்த கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் “முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகளும், இரண்டாம் பாதி ஆக்‌ஷன் காட்சிகளும் என படம் களைக்கட்டுகிறது. 3 வருட காத்திருப்பு வீணாகவில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.

 

Comment

Successfully posted