மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் வரும் 28-ம் தேதி நிறுத்தம்

Jan 24, 2020 01:47 PM 174

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர், வரும் 28-ம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இதன் மூலம், சேலம், நாமக்கல், ஈரோடு, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 16 புள்ளி 05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தாண்டு, அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், காலதாமதமாக, ஆகஸ்ட் மாதம் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதுவரை டெல்டா பாசனத்திற்காக 148 டி.எம்.சி நீர் திறக்கப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதியோடு நீர் திறப்பு நிறுத்தப்படவுள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108 புள்ளி 08 அடியாகவும், நீர் இருப்பு 75 புள்ளி 70 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு 516 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பாசனத்திற்காக 4 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted