100 அடியை எட்டவுள்ள பவானி சாகர் அணையின் நீர்மட்டம்!!

Aug 09, 2020 07:17 PM 1389

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக  உயர்ந்து 100 அடியை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 99 புள்ளி 49 அடியாகவும், நீர் இருப்பு 28 புள்ளி 3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையின் நீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 617 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசன வசதிக்காக ஆயிரத்து 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Comment

Successfully posted