மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரம் : அமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

Jun 13, 2019 02:52 PM 40

மத்திய பட்ஜெட்டின் தயாரிப்பு பணிகள் குறித்து நிதித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து ஜூலை 5ஆம் தேதி தனது முதல் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்கான ஏற்பாட்டு பணிகளில் மும்முரமாக இருக்கும் அவர், துறை வாரியாக ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவர் விவாதித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comment

Successfully posted