முதல் பயணத்தை தொடங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்

Apr 14, 2019 09:41 PM 110

உலகின் மிகப் பெரிய விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக துவக்கி சாதனை படைத்துள்ளது. பால் ஆலென் என்ற விமான வடிவமைப்பாளர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த விமானத்தை வடிவமைத்தார். இரட்டை விமானத்தை போன்ற அமைப்புடன் 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும்.

மோஜாவே பாலைவனப் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் வெற்றிகரமாக இந்த விமானம் வானில் பறந்தது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted