தவறாகப் புரிந்து கொண்டு 3 இளைஞர்களை தாக்கிய பொது மக்கள்

Jun 13, 2019 08:48 AM 49

தேனி அருகே மறியல் போராட்டத்தின் போது தவறாகப் புரிந்து கொண்டு 3 இளைஞர்களை பொது மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் 3 இளைஞர்கள், கிராமத்தின் தெரு வழியாக இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனை தட்டி கேட்ட போது ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும், கிராமத்து மக்கள் சிலரை தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து ஊர் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மறியலின் போது அங்கு வந்த வேறு 3 இளைஞர்களை பொது மக்கள் சரமாரியாகத் தாக்கினர். பெரும் போராட்டத்திற்கு பின்பு காவல்துறையினர் அவர்களை மீட்டனர். பிறகு உண்மை தெரிய வந்ததையடுத்து, தவறாகப் புரிந்து கொண்டு தாக்கி விட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும், அந்த இளைஞர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் ஏற்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

Comment

Successfully posted