காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீடு தேவையில்லை

Jan 24, 2020 09:11 AM 485

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீடு தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியிருந்தார். இந்த நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையேயானது என்றும், இதில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும், பிரச்னையை தீர்க்க உகந்த சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும் என்றும் ரவீஷ் குமார் கூறினார்.

Comment

Successfully posted