மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுக்கு இடமில்லை - தம்பிதுரை

Oct 28, 2018 03:10 PM 277

மக்களவை தேர்தலில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என மக்களவை துணை சபநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தும்பிவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தம்பிதுரை கூறினார். அண்மையில் மத்திய அரசின் விருந்தினராக ராஜபக்சே மற்றும் ரணில் விக்ரமசிங் வந்து சென்ற பிறகு, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ராஜபக்ச பிரதமர் பொறுப்பை ஏற்றதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது நாடகம் எனவும் தம்பிதுரை குற்றம்சாட்டினார்.

Comment

Successfully posted