பாலியல் புகருக்கு காலவரம்பு கிடையாது - மத்திய அரசு

Oct 17, 2018 04:30 AM 328

சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் தற்போதும் புகார் அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் தொடர்பான தகவல்களை ”மீடூ ஹேஸ்டேக்” மூலம் பகிர்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்தும், இதனால் தாங்கள் அனுபவித்த மனவேதனையை பெண்கள் தைரியத்துடன் வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், பாலியல் தொடர்பான புகார் கொடுப்பதற்கான காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் தற்போதும் புகார் அளிக்கலாம் என்றும், போக்சோ சட்டத்தில் புகார் அளிக்க எந்தவித காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

Comment

Successfully posted