தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி

Feb 13, 2020 12:15 PM 496

தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் போதுமான மின் உற்பத்தி உள்ளதாகவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Comment

Successfully posted