திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமிக் கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது

Aug 29, 2019 10:04 AM 227

தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் ஆவணித் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ தம்பிரான் சுவாமிகள் தேரினை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை துவங்கி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். ஆவணித்திருவிழா தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

Comment

Successfully posted