பாஜக நிர்வாகியை வெட்டி வீசிய மர்ம நபர்கள்

Apr 15, 2019 04:02 PM 56

நாகை அருகே பாஜக நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் காமேஸ்வரம் அருகே உள்ள கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் உடல் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர், ஆற்றில் மிதப்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பதை கண்டறிந்தனர். செந்தில்குமாரை மர்மநபர்கள் வெட்டி வீசியது தெரிய வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted