வைகோவின் கோபம் என் மீதா? வன்னி அரசு மீதா? - திருமாவளவன்

Dec 06, 2018 05:13 PM 219

மதிமுக பொது செயலாளர் வைகோவின் கோபம் தன் மீதா? அல்லது வன்னி அரசு மீதா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொது செயலாளர் வைகோ, சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது சில கருத்துக்களை கூறியிருந்தார்.

அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், வன்னி அரசு வெளியிட்ட கருத்து மற்றும் வைகோ பேச்சு குறித்து திருமாவளவன் விளக்கமளித்தார்.

வைகோ பற்றி வன்னி அரசு பதிவு செய்த கருத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்தல்ல என்றும், சர்ச்சைக்குரிய பதிவை வன்னி அரசு நீக்கிவிட்டதாகவும் கூறினார். மேலும் பேசிய அவர், வைகோவின் கோபம் தன் மீதா? அல்லது வன்னி அரசு மீதா? என்றும், தனது எதிர்ப்பை நேரடியாக பதிவு செய்வதை தவிர, தான் யாரையும் தூண்டி விடுவதில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.

Comment

Successfully posted