ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த பேருந்துகள் திருப்பதிக்கு தினந்தோறும் இயங்கி கொண்டிருக்கிறது - சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

Nov 10, 2018 10:47 PM 409

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த பேருந்துகள் திருப்பதிக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருவதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
சுற்றுலா துறையின் சார்பாக துபாய் சென்றிருந்த அவர் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து  அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய அவர், கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

 

 

 

 

Comment

Successfully posted