ரூ.25-க்கு திருப்பதி தேவஸ்தான தகவல் மையங்களில் லட்டு விற்பனை!

May 23, 2020 08:29 PM 1190

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திராவில் உள்ள அனைத்து  தேவஸ்தான தகவல் மையங்களில் லட்டு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் ஏழுமலையானின் பிரசாதமாக அளிக்கப்படும் லட்டுவை தேவஸ்தான தகவல் மையங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற திருப்பதி தேவஸ்தானம் முதற்கட்டமாக ஆந்திராவின் 7 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களுக்கு லட்டுகளை லாரி மூலம் அனுப்பி வைத்தனர். அதன்படி விசாகப்பட்டினம், குண்டூர், கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களுக்கு லட்டு பிரசாதத்தை அனுப்பி வைத்தனர். 25 ரூபாய்க்கு லட்டுகள் விற்கப்படுவதாகவும், மே 25ஆம் தேதிக்குள் ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களுக்கும் லட்டு பிரசாதம் அனுப்பப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted