திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம்

Oct 03, 2019 08:35 AM 319

திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ வாகன சேவை களைப்பைப் போக்க உற்சவருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்த களைப்பைப் போக்க அவருக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்றுப் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், பழச்சாறு உள்ளிட்டவற்றைத் திருமலை பெரிய ஜீயர் தன் கைகளால் எடுத்துத்தர அர்ச்சகர்கள் உற்சவருக்கு ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினர். அதன்பின் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்குப் பலவகை மலர்கள், உலர்பழங்களால் ஆன மாலை, கிரீடம், சடை உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted