பூண்டி நீர்த்தேக்கத்தை நேரில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர்

Sep 25, 2019 08:25 AM 220

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வரும் புதன்கிழமை நீர் திறக்கப்பட உள்ளதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பூண்டி நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தார். தொடர் மழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் மற்றும் சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனிடையே வரும் புதன்கிழமை கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட இருப்பதாக கிருஷ்ணா நதி நீர் திட்ட செயற்பொறியாளர் மரிய ஹென்ரி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். பூண்டி நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், சென்னை மக்களுக்கு குடிநீர் சேவை வழங்குவதில் எந்த சிரமமும் இருக்காது என்று தெரிவித்தார்.

Comment

Successfully posted