திருவான்மியூரில் மனைவியின் காதலனால் தாக்கப்பட்ட கணவர் கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Oct 16, 2018 06:59 AM 407

சென்னை திருவான்மியூரில் மனைவியின் காதலனால் தாக்கப்பட்ட கணவர் கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த கதிரவன் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

கதிரவன் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளன்று காலை 11 மணியவில் இருவரும் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றனர். கண்ணை கட்டிக்கொண்டு விளையாடிய போது, கதிரவனின் பின்தலையில், மனைவியின் காதலன் சுத்தியலால் பலமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.

இதில் பலத்த காயமடைந்த கதிரவனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாறு தனியார் மருத்துவமனையில் கதிரவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அனிதாவின் காதலன் ஆண்டனி ஜெகனால் தாக்கப்பட்ட கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக கதிரவன் மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அந்தோனி ஜெகன் என்பவரை திருமணத்திற்கு முன்பிருந்தே காதலித்து வந்ததாகவும், திருமணம் பிடிக்காத காரணத்தினால் காதலன் உதவியுடன் கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார்.

அனிதாவின் காதலன் அந்தோனி ஜெகன் மதுரை காமராஜர் பல்கலை.யில் எம்.ஏ. படித்து வந்துள்ளார். கதிரவனை கொலை செய்வதற்காக மதுரையில் இருந்து சென்னை வந்து, மீண்டும் மதுரைக்கு சென்ற அந்தோனி ஜெகனை, அவரது செல்போன் சிக்னலை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

அனிதாவை கைது செய்த போலீசார் 394- பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Comment

Successfully posted