என் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..

Nov 18, 2019 01:25 PM 1099

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167வது படம் தான் தர்பார்.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவுள்ளார்.ரஜினிக்கு ஜோடியாக கிட்டதிட்ட 10 ஆண்டுகள் கழித்து நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் இதில் நிவேதா தாமஸ், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் post production வேலைகள் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது.இதன் முதல் கட்டமாக கடந்த வாரம் தலைவரின் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரத்திற்கான டப்பிங் தொடங்கியது.

இந்நிலையில் ரஜினியின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக ஏ.ஆர். முருகதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அதில்’ என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்று இதுதான்.தர்பார் படத்தில் தலைவரின் டப்பிங் முடிந்தது.தர்பார் திருவிழா என கூறி ஏ.ஆர்.முருகதாஸ்,ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

மேலும் சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் ரஜினியின் 168வது படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Comment

Successfully posted