கொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம்

Aug 15, 2018 08:20 AM 643
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான அஞ்சுவீடு,பேத்துப்பாறை,அஞ்சுரான்மந்தை,கணேசபுரம் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக காட்டு யானைகள்  முகாமிட்டுள்ளன. விவசாய நிலங்களையும், பயிர்களையும் யானைகள் சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பேத்துப்பாறை கணேசபுரம் பகுதியில் பிரபு என்பவருடைய தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், காப்பி பயிர்களையும், உர மூட்டைகளையும் சேதப்படுத்தின. காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Comment

Successfully posted

Super User

welcome