சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள்

Jul 17, 2019 10:22 PM 93

அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவர் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். உள்துறை அமைச்சராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அமித் ஷா வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்துசெய்வது உறுதி என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பேசிய அவர், அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலின் போது பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted

Super User

அருமையான செய்தி