தாயை மதிப்பவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் - நடிகை விந்தியா!

Apr 04, 2021 06:03 PM 1010

தாயைத் தவறாகப் பேசியவனை தண்டிக்காமல் விடுவது தமிழர்களின் மரபல்ல என்றும் தாயையும் தமிழ் மண்ணையும் மதிப்பவர் எவரும் திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று நடிகை விந்தியா பரப்புரை மேற்கொண்டார்.

வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக்கை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரான நடிகை விந்தியா இறுத்திக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசியவர், வந்ததை சுருட்டுவதும், வாரிசு அரசியலையும், குடும்ப லாபத்துக்காக கூட்டணிக்கு கூஜா தூக்குவதையும் கற்றுக்கொடுத்தது கருணாநிதி என்று சாடினார். ஆட்சியில் இருக்கும்போது மக்களைப் பற்றி சிந்திக்காதவர்கள் திமுகவினர் என்று கூறியவர், திருடர்களை கூட நம்பலாம், ஆனால் திமுகவினரை நம்பக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

Comment

Successfully posted