ஓட்டு போடாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் -பாஜக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

Nov 24, 2018 08:21 AM 582

தேர்தலில் தனக்கு ஓட்டு போடாவிட்டால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக பாஜகவை சேர்ந்த அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக இடையே போட்டி நிலவி வரும் நிலையில், அந்த மாநில பாஜகவை சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சரான ஸ்ரீசந்த் கிருபளானி, நிம்பஹரா தொகுதியில் 3 வது முறையாக போட்டியிடுகிறார்.

இதனையொட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தனக்கு ஓட்டு போட்டு வெற்றிபெறச் செய்யவில்லை என்றால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளதால், அந்த அடிப்படையில் தான் ஓட்டு கேட்டதாக விளக்கமளித்துள்ளார்.

 

Comment

Successfully posted