அம்பத்தூரில் JCB இயந்திரத்தை திருடி விற்ற மூவர் கைது

Jan 24, 2020 07:22 AM 228

சென்னை அம்பத்தூரில் புதியதாக வாங்கிய JCB இயந்திரத்தின் மாத தவணையை கட்ட மற்றொரு JCB இயந்திரத்தை திருடி விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூரில், கடந்த 19ம் தேதி ராஜீவ் காந்தி என்பவருக்கு சொந்தமான JCB இயந்திரம் ஒன்று காணாமல் போனது. JCB காணாமல் போனது குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ராஜீவ் காந்தி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படை காவல்துறையினர், ஆந்திர மாநிலம் சித்தூர் விஜயபுரம் என்ற இடத்தில் JCB இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். JCB இயந்திரத்தை திருடிச் சென்ற ஆந்திராவை சேர்ந்த கேசவன், செங்குன்றத்தை சேர்ந்த கார்த்தி, திருத்தணியை சேர்ந்த ராமராஜ் ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதியதாக வாங்கிய JCB இயந்திரத்தின் மாத தவணையை கட்ட, இந்த JCB இயந்திரத்தை திருடி விற்றதாக ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, மூவரும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comment

Successfully posted